இதன் மூலம் தற்போது பொதுவான தணிக்கை முறையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் இனி தொடர்புடைய பிரிவுகளுக்கு நேரடியாக ஒதுக்கப்படும் என்பதால் தணிக்கை நடவடிக்கைகள் அதிக பயனுள்ள வகையில் முன்னெடுக்கப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை திணைக்களத்தில் நிலவும் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் 250 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சேர்ப்புகளுக்கான அனுமதியை தேசிய தணிக்கை ஆணைக்குழு வழங்கியுள்ளதாகவும் இதன்மூலம் திணைக்களத்தின் சேவை மற்றும் கண்காணிப்பு திறன் மேலும் வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.































