சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கண்டி நகரத்திற்கு பிரவேசிக்கும் பிரதான வீதிகளில் ஒன்றான கண்டி–யாழ்ப்பாணம் வீதி (A009) மஹையாவ பகுதியில் அமைக்கப்படவுள்ள சுரங்கப்பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் 699.6 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டம், 273 நாட்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் அங்கு கூடியிருந்த பொதுமக்களுடனும் சுமூகமாக உரையாடினார். இந்த நிகழ்வில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading