பிரான்ஸில் சமூக அமைப்புகளுக்கான நன்கொடைகளுக்கு வழங்கப்படும் வரிவிலக்கு விதிகளில் 2026 ஆம் ஆண்டில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக பொதுநல அமைப்புகளுக்கான நன்கொடைக்கு 66% வரிவிலக்கு வழங்கப்படுகிறது. ஆனால் வீடு இல்லாதவர்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் குடும்ப வன்முறை சம்பவங்களில் உதவிடும் அமைப்புகளுக்கு செய்யும் நன்கொடைக்கு 75% வரிவிலக்கு வழங்கப்படும்.

முன்பு இந்த உயர்ந்த வரிவிலக்கு €1,000 வரை மட்டுமே பொருந்தியது. 2026-ல் 14 அக்டோபர் 2025 முதல் செய்யும் நன்கொடைகளுக்கு இதன் வரம்பு €2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட தொகைக்கு 66% வரிவிலக்கு பொருந்தும்.

உதாரணமாக 14 அக்டோபர் – 31 டிசெம்பர் 2025 வரை €2,400 நன்கொடை செய்தால் €2,000க்கு 75% (=€1,500) மற்றும் மீதமான €400க்கு 66% (=€264) வரிவிலக்கு வழங்கப்படும் மொத்தம் €1,764 வரிவிலக்கு பெறப்படும். மேலும் வருமான அறிக்கையில் இதற்கான தனி பெட்டி அமைக்கப்படும் மற்றும் 2026-ல் 2025 வருமான அறிக்கையை அறிவிப்பது ஏப்ரல் மாதம் தொடங்கும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading