சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்ததால் தீவு மக்களும் பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதையடுத்து குறித்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி வடதாரகை படகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அது மீண்டும் பயணிகள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. இதேவேளை நெடுந்தாரகை படகு காங்கேசன்துறை துறைமுகத்தில் திருத்தப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. மேலும் இயந்திரக் கோளாறு காரணமாக சேவையிலிருந்து விலக்கப்பட்டிருந்த குமுதினி படகின் திருத்தப் பணிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்