குருணாகல் மாவட்டத்தின் அலவ்வ பகுதியில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி 33 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (14) காலை அலவ்வ நகருக்கு அருகிலுள்ள காணி ஒன்றின் அருகே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. ஆரம்ப விசாரணைகளில் குறித்த காணியில் பயிரிடப்பட்டிருந்த மரவள்ளிக்கிழங்கு பயிர்களை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் தேங்காய் பொறுக்குவதற்காக காணிக்குள் நுழைந்தபோது மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் மனிதப்படுகொலை சந்தேகத்தின் பேரில் காணியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக குருணாகல் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Leave a Reply