சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

குற்றச்செயல், இலங்கை செய்திகள்

பொரளை பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 46 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்டு சர்வதேச சிவப்பு அறிவிப்பின் கீழ் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

2025 ஆகஸ்ட் 7 ஆம் திகதி சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி எனக் கூறப்படும் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் இங்கிரிய பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

மேலும் துப்பாக்கிதாரிகளுக்கு ஆயுதங்களை கொண்டு வந்து வழங்கியதாக கூறப்படும் இலங்கை செய்திகள் மாதம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து பொரளை பகுதியில் மூடப்பட்டிருந்த வீட்டொன்றில் புதைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு சுழல் துப்பாக்கிகள் மற்றும் 9 மில்லிமீட்டர் ரக தோட்டாக்கள் நான்கும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்