2026.04.03 அன்று காலை மினுவாங்கொட பொலிஸ் விசேட நடவடிக்கைப் படையினர் கொத்துகொட பகுதியில் மேற்கொண்ட சோதனையில் 3830 லிட்டர் கோடா (24 பேரல்கள்) கள்ளச்சாராயத்துடன் 34 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொட பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அதே நாளில் மாலை பாமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் முத்துராஜவெல வகுருபீம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கள்ளச்சாராயம் தயாரித்து வந்த 3213 லிட்டர் கோடா (17 பேரல்கள்) கைப்பற்றப்பட்டதுடன் உஸ்வெட்டகெய பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரையும் தொடர்புடைய பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றன.






























