இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பாக பாராளுமன்ற விசேட குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளது. இந்தக் கூட்டம் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இதன்போது தேர்தல் நடத்துவதில் காணப்படும் சட்டரீதியான தடைகள் மற்றும் அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், பாராளுமன்றம் தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டால், எந்த நேரத்திலும் மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதியமைச்சர்கள் மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு தேர்தல் முறைமை தொடர்பாக கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.





























