இலங்கையில் ஒருவர் கைது – 2252 கிலோ பீடி இலைகள் பறிமுதல்.
2026.04.09 அன்று அதிகாலை பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவத்த பகுதியில் பமுனுகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது
தீர்வைவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 2252 கிலோகிராம் பீடி இலைகளும் அவற்றை கடத்த பயன்படுத்தப்பட்ட 03 படகுகளும் உடன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 26 வயதுடையவர் ஆவார் அவர் செத்தப்பாடுவ பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Leave a Reply