சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

ஸ்பெயின் அரசு 2026 ஆம் ஆண்டில் ஆவணங்களின்றி நாட்டில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு விசேட சட்டபூர்வ குடியிருப்பு அனுமதி (Extraordinary Regularization) வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 500,000க்கும் மேற்பட்ட குடியேறிகள் பயனடையலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது

2026 ஜனவரி 1க்கு முன்பு ஸ்பெயினில் இருந்ததை நிரூபிக்கக்கூடியவர்கள் குறைந்தது 5 மாதங்கள் தொடர்ந்து நாட்டில் தங்கியிருந்தவர்கள் மற்றும் குற்றப் பதிவுகள் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியும். சில அகதி கோரிக்கை செய்தவர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமாக அனுமதி கிடைத்தால் ஒரு வருட குடியிருப்பு மற்றும் வேலை அனுமதி வழங்கப்படும்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

ஆனால் இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தாது. ஏற்கனவே செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதி வைத்திருப்பவர்கள் வேறு குடியேற்ற விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளவர்கள் உக்ரைன் தற்காலிக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இருப்பவர்கள் பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதப்படுபவர்கள் மற்றும் குற்றப் பதிவுகள் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது.

மேலும் சில அகதி விண்ணப்பதாரர்கள் அனுமதி கிடைத்தால் தங்களது அகதி கோரிக்கையை திரும்பப் பெற வேண்டிய நிலையும் உருவாகலாம்.

ஸ்பெயின் அரசு இந்த நடவடிக்கையின் மூலம் சட்டவிரோத வேலைவாய்ப்புகளை குறைத்து தொழிலாளர் பற்றாக்குறையை சமாளித்து குடியேறிகளை அதிகாரப்பூர்வ பொருளாதாரத்தில் இணைக்க முயல்கிறது. தற்போது இந்த திட்டத்திற்காக ஏற்கனவே 900,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்