ஐரோப்பாவில் கடந்த பல ஆண்டுகளில் காணப்பட்ட மிகத் துணிச்சலான குடியேற்றச் சீர்திருத்தத்தை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. 2026 பிப்ரவரி 2 அன்று, பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெளியிட்ட வீடியோ உரையில், அரசரின் அவசர உத்தரவு (Royal Decree) ஒன்றை உறுதியாக பாதுகாத்தார்.

இந்த உத்தரவின் மூலம் சுமார் 5 லட்சம் ஆவணமற்ற குடியேற்றங்கள் மற்றும் அகதி கோரிக்கையாளர்கள் ஏப்ரல் மாதத்திலிருந்து குடியிருப்பு மற்றும் வேலை அனுமதிகளை பெற வாய்ப்பு கிடைக்கிறது. இந்த முக்கிய முடிவு 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் கையெழுத்துகள் கத்தோலிக்க திருச்சபை மற்றும் 900-க்கும் அதிகமான குடிமக்கள் அமைப்புகள் ஆதரித்த Popular Legislative Initiative மூலம் உருவானது.

ஆட்சியில் உள்ள சோஷலிஸ்ட் கட்சி மற்றும் போடேமோஸ் (Podemos) கட்சிக்கிடையிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இந்த முன்மொழிவு முடக்கத்திலிருந்து வெளியேறி நடைமுறைக்கு வந்தது.

அரசாணைப்படி விண்ணப்பிப்பவர்கள் 2025 டிசம்பர் 31க்கு முன்னரே ஸ்பெயினில் வசித்து வந்திருக்க வேண்டும் அல்லது அகதி கோரிக்கை பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், குற்றப் பின்னணி இல்லையென நிரூபிக்க வேண்டும். தகுதி பெறுவோருக்கு முதலில் ஒரு ஆண்டு கால குடியிருப்பு அனுமதி வழங்கப்படும்.

இதை பின்னர் வழக்கமான குடியேற்ற வகைகளாக மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் சட்டபூர்வ வேலைவாய்ப்பு, சுகாதார சேவைகள் மற்றும் சமூக பாதுகாப்பு நன்மைகள் கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. சிறுவர் குழந்தைகள் ஒரே நேரத்தில் சட்டபூர்வமாக்கப்படுவார்கள் அவர்களுக்கு ஐந்து ஆண்டு கால குடியிருப்பு அனுமதி வழங்கப்படும்.

இது குடும்பங்களை பிரியாமல் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த கொள்கையை “மரியாதை, சமூக ஒற்றுமை மற்றும் நீதிக்கான தேர்வு” என சான்செஸ் வர்ணித்தார். பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் கடுமையான குடியேற்றக் கொள்கைகளுக்கு மாறாக மனிதநேய அணுகுமுறையை ஸ்பெயின் எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த சட்டபூர்வமாக்கல் நடவடிக்கையால் வரி வருவாய் அதிகரிக்கும், தொழிலாளர் சுரண்டல் குறையும், மேலும் விவசாயம், ஹோட்டல் மற்றும் உணவகத் துறை, முதியோர் பராமரிப்பு, கட்டுமானம் போன்ற துறைகளில் உள்ள திறன் குறைபாடுகளை நிரப்ப உதவும் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

டுத்த பத்து ஆண்டுகளில் ஸ்பெயினின் வேலை செய்யும் வயது மக்கள்தொகை சுமார் 8 லட்சம் குறையும் என கணிக்கப்படுவதால் இந்த முடிவு பொருளாதார ரீதியாகவும் அவசியமானதாக வணிக அமைப்புகள் பாராட்டுகின்றன. இந்த சீர்திருத்தம் ஐரோப்பா முழுவதும் குடியேற்ற விவாதங்களை புதிய திசையில் நகர்த்தும் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading