இலங்கையில் பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியவர் கைது.
சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ள ஒரு வீடியோவில் பட்டாசு வெடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்ட பெண்ணை ஒரு நபர் குச்சியால் கொடூரமாக தாக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் நாய்கள் பட்டாசு சத்தத்தால் பயந்து துன்புறுத்தப்பட்டதால் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மொரகஹஹேனா பொலிஸ் நிலையம் விசாரணை ஆரம்பித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்த பின்னர் குறித்த தாக்குதலில் ஈடுபட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்டவர் வெல்மில்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஹொரண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் 24.04.2026 வரை ரிமாண்ட் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





Leave a Reply