
இந்தச் சட்டத்தின் மூலம் Immigration Advice Authority (IAA)-க்கு கூடுதல் ஒழுங்குமுறை மற்றும் அமலாக்க அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தரமற்ற சுரண்டலான அல்லது சட்டவிரோத குடியேற்ற ஆலோசனை வழங்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க IAA-க்கு இப்போது வலுவான சட்ட ஆதாரம் உள்ளது.
புதிய அதிகாரங்களின் கீழ், பதிவு செய்யப்பட்ட ஆலோசகர்களுக்கு £15,000 வரை அபராதம், £250,000 வரை கட்டணத் திருப்பிச் செலுத்தல் மற்றும் இழப்பீடு, மேலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டால் பதிவை உடனடியாக ரத்து அல்லது இடைநிறுத்தம் செய்யும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்படாத ஆலோசகர்களுக்கும் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்த மாற்றங்கள் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன் மேலதிக திட்டமிடல் நடைபெறவுள்ளதுடன், குடியேற்ற ஆலோசனை பெறும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான சேவை சூழல் உருவாக்குவதே இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






























