சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாற்று யோசனைகளை முன்வைக்குமாறு சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் அரசாங்கம் எதிர்வரும் மாதம் முதல் சில மானியங்கள் மற்றும் நலன்புரி கொடுப்பனவுகளை இடைநிறுத்தத் தீர்மானித்துள்ளமை குறித்து IMF அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல் நடத்தியதாக கூறினார்.

IMF திட்டத்தின் கீழ் தொடர்ச்சியாக வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாழ்க்கைச் செலவும் உயர்ந்துள்ளதாகவும், எரிபொருள் விலை மற்றும் மின்கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் அதற்கேற்ப எரிபொருள் விலையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய அவர் மக்களின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்