இந்த ஒப்பந்தம் IMF நிர்வாக சபை அங்கீகாரம் பெற்றவுடன் இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக வெளிநாட்டு நாணய கையிருப்புகள் அதிகரித்துள்ளதுடன் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) மற்றும் வருவாய் சேகரிப்பும் எதிர்பார்த்ததை விட மேம்பட்டுள்ளதாக IMF குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் இலங்கை இன்னும் வெளிப்புற அபாயங்களுக்கு உட்பட்டுள்ளதால், பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்கவும் உள்ளடக்கமான வளர்ச்சியை உறுதி செய்யவும் சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





























