பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் வரி அதிகரிப்பு எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள சுமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனக் குறிப்பிட்டார்.
மேலும் IMF திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி விரிவாக்கம் போன்ற இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா என்பதை விளக்குவதுடன் திட்டம் நிறைவடைந்த பின் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்கும் மாற்று உத்தியையும் அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.


































