பாடல் எந்தச் சூழலில் இடம்பெறுகிறது என்பதே படைப்பின் முதல் அடிப்படை. கதாநாயகன் அறிமுகப் பாடல், காதல் பாடல், சோகப் பாடல், குழு நடனக் காட்சி ஆகியவற்றுக்கு ஏற்ப நடன அசைவுகளும் கேமரா மொழியும் மாறுகின்றன. காட்சித் தொகுப்புப் பாடல்களில் காலப்போக்கு, பயணம், வெற்றி அல்லது தோல்வி போன்றவை சிறு காட்சிகளாக இணைக்கப்படுகின்றன.
தாளம் முதல் கேமரா இயக்கம் வரை
நடன இயக்குநர் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு அதன் ரிதம், டெம்போ, பீட் மற்றும் வரிகளை ஆராய்கிறார். 2, 4, 8 எனப்படும் பார் கணக்குகள் மூலம் அசைவுகள் திட்டமிடப்படுகின்றன. அதே கணக்கீடு ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கிலும் பயன்படுத்தப்படுகிறது.
21 முதல் 35 எம்.எம். வைடு லென்ஸ் அசைவுகளுக்கு பரந்த தோற்றத்தை வழங்குகிறது. 85 முதல் 135 எம்.எம். அல்லது அதற்கு மேற்பட்ட டெலிபோட்டோ லென்ஸ் குழு நடனத்தில் அடர்த்தியான தோற்றத்தை உருவாக்குகிறது. ஸ்டெடிகேம், டாலி, டெக்னோகிரேன், ஹேண்ட்ஹெல்ட், எஃப்.பி.வி. ட்ரோன், மோஷன் கன்ட்ரோல் ரிக் போன்ற கருவிகள் காட்சியின் தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்யப்படுகின்றன.
படப்பிடிப்புக்கு முன் கண்ணாடி ஒத்திகை, தரைக் கோடு குறியீடு, கேமரா திட்டமிடல், லென்ஸ் சோதனை ஆகியவை நடக்கின்றன. பின்னர் இசையின் பீட்டுக்கு ஏற்ப எடிட்டிங் செய்யப்படும் போது Cinematic Song Choreography முழுமையான தாக்கத்தைப் பெறுகிறது.
‘லா லா லேண்ட்’ படத்தின் ‘Another Day of Sun’, ‘A Lovely Night’ பாடல்களிலும், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ பாடலிலும் நடனமும் கேமராவும் ஒரே தாளத்தில் இயங்கும் விதத்தை காணலாம்.





























