Tag: Parliament
அர்ச்சுனா நாடாளுமன்றம் விலகல் தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் தாம் இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் மட்டுமே நாடாளுமன்றத்தில் இருப்பேன் என்றும் அதன் பின்னர் அங்கிருந்து விலக நேரிடலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான பல முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கும் ஜனாதிபதி அனுர குமார […]
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்கும் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடைபெற்று வரும் விசாரணைகளையும் சம்பவங்களின் உண்மையான பின்னணியையும் திசைதிருப்ப முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறைச்சாலைகளுக்குள் உள்ள சில தரப்பினரும் அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால் குடும்பங்களை குழந்தை பெற ஊக்குவிக்கும் வகையில் நிதி ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் சமர்ப்பித்துள்ள பிரேரணையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை கணிசமாகக் குறையக்கூடும் […]
தொண்டமானாறு – அச்சுவேலி வீதியின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வீதியோரங்களில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொட்டும் கழிவுகளால் தாங்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டு கழிவுகள் மட்டுமின்றி மனிதக் கழிவுகள் சிறுவர்களின் பயன்படுத்தப்பட்ட டையப்பர்கள் இறந்த மிருகங்களின் உடல்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்றவை வீதியோரங்களில் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் […]
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அதிகாரப்பூர்வ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவில் சஜித் பிரேமதாசவும் உறுப்பினராக செயல்பட்டிருந்தார். அந்த நியமனம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தவும் மேலதிக தகவல்களைப் பெறவும் அவரிடம் வாக்குமூலம் பெற […]
விசாரணைகளில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அசாத் மௌலானா தொடர்பாக புதிய தகவல்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து காவலில் வைப்பதைத் தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த ரிட் மனு நேற்று (09) நான்காவது நாளாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத் முக்கிய விடயங்களை முன்வைத்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனக் டி […]
இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்பினருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழு (COPF) அறிக்கை இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோது குறித்த நிதி பரிமாற்றம் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் செயல்முறை குறித்து தேசிய […]
எல் நினோ மற்றும் லா நினா காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு அறிவியல் தரவுகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கைகள் உருவாக்கப்படுவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எல் நினோ மற்றும் லா நினா தொடர்பான நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம் உணவுப் பாதுகாப்பு நீர்வளங்கள் மற்றும் […]
மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார். 2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி […]
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 1854.77 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகளவான வெளிநாட்டு அரசமுறை கடன்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தயாசிறி ஜயசேகர முன்வைத்த தகவல் அறியும் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள அமைச்சு அரசாங்கத்தின் வெளிநாட்டு கடன் பெறல் தொடர்பான விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியிலிருந்து 2025 மே 6 […]