மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் செயல்முறை குறித்து தேசிய கணக்காய்வு அலுவலகம் உடனடியாக விரிவான கணக்காய்வை மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மோசடி தொடர்பாக குற்றவியல் சட்டத்தின் கீழ் தேவையான சட்ட நடவடிக்கைகளை சட்ட மா அதிபர் முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளுக்கு அமைய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் ஹர்ஷ டி சில்வா கோரிக்கை விடுத்தார். இதனிடையே அறிக்கை தொடர்பாக எதிர்வரும் வாரம் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க கோரிக்கை முன்வைத்த நிலையில் அதுகுறித்த இறுதி தீர்மானம் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
































