அவர் சமர்ப்பித்துள்ள பிரேரணையில் 2018 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாகவும் இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை கணிசமாகக் குறையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இளைஞர் சனத்தொகை குறைவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொழிலாளர் பலம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களை கவரக்கூடிய நிதி ஊக்கத்திட்டம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தின் கவனத்திற்காக அவர் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளார்.



























