மேலும், சிறைச்சாலைகளுக்குள் உள்ள சில தரப்பினரும் அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார். சிறைச்சாலைகளில் உருவாகும் பதற்றமான சூழ்நிலைகளும், அதே நேரத்தில் வெளியில் நடைபெறும் அரசுக்கு எதிரான அரசியல் பிரச்சாரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக முதற்கட்ட பார்வையிலேயே தெரிகிறது எனவும் சூரியராச்சி தெரிவித்தார்.
இருப்பினும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீனமான உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




























