நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் வழங்கும் இப்படத்தை, ஃபார்ச்சூன் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சுஷாந்த் பிரசாத் இணைந்து தயாரிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். முதல் காட்சியைத் தொடங்கி வைத்த அவர், இசை தனது வாழ்க்கையில் இயல்பாகவே வந்ததாகப் பேசினார்.
இசை குறித்த இளையராஜாவின் அனுபவப் பகிர்வு
காடுமேடுகளிலும் முள்ளுக்காடுகளிலும் வளர்ந்ததாகக் கூறிய இளையராஜா, இசையைக் கற்றுக்கொடுக்க அருகில் யாரும் இல்லாத நிலையில், தானாகவே இசையை கற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். பியானோவைப் பார்க்கவே தனக்கு 27 வயதாகிவிட்டதாகவும் அவர் கூறினார்.
ஜெர்மனியில் இருந்த ஒரு தமிழ் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தையின் அசைவுகள் நின்றபோது, தனது இசையைக் கேட்கச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு, அறுவைச் சிகிச்சைக்கு முன்பான பரிசோதனையில் குழந்தைக்கு உயிர் இருப்பது தெரியவந்ததாக அவர் கூறினார். இந்த நிகழ்வைத் தனது பெருமையாகக் கருதவில்லை என்றும், இசையமைப்பது தனது வேலை என்றும் இளையராஜா தெரிவித்தார்.
மாரி செல்வராஜுடன் இணைந்து உருவாக்கும் இந்தப் படத்துக்கு, தமக்குக் கிடைத்த சக்தியைப் பயன்படுத்தி இசையமைத்து வருவதாகவும் அவர் கூறினார். Ilaiyaraaja Manjannathi film தொடர்பான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

































