கொரோனா காலத்தில், தனது 13வது வயதில் ஏ.ஐ. மற்றும் மெஷின் லேர்னிங் கற்கத் தொடங்கியதாக ஆயுஷ் சிங் கூறினார். பொருளாதார நெருக்கடி காரணமாக விலையுயர்ந்த படிப்புகளில் சேர முடியவில்லை என்றும், பழைய ஆன்லைன் கோர்ஸ், லேப்டாப் மற்றும் இணைய இணைப்பை பயன்படுத்தி கற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏ.ஐ. கற்றலில் அடிப்படைகளுக்கு முக்கியத்துவம்
மெஷின் லேர்னிங்கின் அடிப்படைகளை கற்ற பிறகு, சர்வதேச நிறுவனங்களை அணுகியதாக அவர் கூறினார். ஆரம்பத்தில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து முயன்றதால், சில மாதங்களுக்குப் பிறகு சர்வதேச ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார்.
14 வயதில் ஏ.ஐ. கோர்ஸ் ஒன்றை உருவாக்கியதாகவும், அதற்காக எம்.ஐ.டியின் பாராட்டு கிடைத்ததாகவும் அவர் கூறினார். பின்னர் Antern என்ற ஏ.ஐ. நிறுவனத்தை உருவாக்கியதுடன், Second Brain Labs நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் ஆனார். டேட்டா சயின்டிஸ்ட், MLOps இன்ஜினீயர், ஃப்ரீலான்சர் மற்றும் கன்சல்டன்ட் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக Ayush Singh AI journey காட்டுகிறது.
ஏ.ஐ. கற்க விரும்புவோர் முதலில் அடிப்படை கணிதக் கருத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே அவரது ஆலோசனை. Generative AI மற்றும் MLOps துறைகளில் தற்போது அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.





























