சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பிரான்சில் எரிபொருள் விலை சமீப வாரங்களில் குறையத் தொடங்கியிருந்தாலும் லிட்டருக்கு €1.70 என்ற நிலைக்கு திரும்ப இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என்று பொருளாதார அமைச்சர் Roland Lescure தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஏற்பட்ட பதற்றம் குறைந்து Strait of Hormuz மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை காரணமாக உலக எண்ணெய் சந்தையில் அழுத்தம் குறைந்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன்பு பிரான்சில் எரிபொருள் விலை €1.70 ஆக குறைய இன்னும் காலம் தேவை லிட்டருக்கு சுமார் €2.40 வரை உயர்ந்திருந்தது. தற்போது அது €2.00 அளவுக்கு குறைந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் விநியோக சங்கிலிகள் முழுமையாக இயல்புநிலைக்கு திரும்பவும் கப்பல் போக்குவரத்து தடைகள் நீங்கவும் இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Emmanuel Macron கூட எரிபொருள் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருந்தாலும் அந்த தாக்கம் நேரடியாக பெட்ரோல் நிலையங்களில் தெரியும் வரை சிறிது கால தாமதம் இருக்கும் என கூறியுள்ளார்.

அதே நேரத்தில் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால் அதன் பயனை உடனடியாக நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. தற்போது €2 க்குக் கீழ் விலையை நிலைநிறுத்துவதே முக்கிய முன்னேற்றமாக கருதப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்