சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இந்து ஆலயங்கள் மற்றும் தர்ம நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாகத்தினருக்கான சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று கடந்த 17ஆம் திகதி சுத்தானந்த இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கையில் இந்து ஆலயங்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குப் பொருந்தும் சட்ட ஏற்பாடுகள் 1917ஆம் ஆண்டு 9ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பிரதேச செயலாளர்களின் பொறுப்புகள் மற்றும் தர்ம நம்பிக்கைப் பொறுப்பு நிறுவனங்களின் நிர்வாக நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

வளவாளராக சட்டத்தரணி வி.எஸ். கணேசராஜன் கலந்துகொண்டு சட்ட ரீதியான வழிகாட்டல்களை வழங்கினார். வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நா. கமலதாசன் இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ப. சத்தியநாதன் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் மற்றும் சமய அமைப்புகளின் பிரதிநிதிகள் நிகழ்வில் பங்கேற்று கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்