இந்த ஆண்டுக்கான வேசாக் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடைபெறவுள்ள 25வது “பௌத்தலோக வேசாக் வலயம்” தொடர்பான ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாநாயக்க மற்றும் பௌத்தலோக வேசாக் குழு பிரதிநிதிகள் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
மே 30 முதல் ஜூன் 1 வரை பௌத்தலோக மாவத்தையில் நடைபெறவுள்ள இந்த வேசாக் வலயம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஒருங்கிணைப்பில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நடத்தப்படவுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல் பாதுகாப்பு மற்றும் நிகழ்ச்சி ஒழுங்குகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கொழும்பு மேயர் Vraie Cally Balthazaar ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர் ரோஷன் கமகே, அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் சந்திர நிமல் வகிஷ்ட உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





Leave a Reply