சூறாவளி டிட்வா காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள ‘Rebuilding Sri Lanka’ நிதிக்கு CEAT Sri Lanka நிறுவனத்தின் கெலனி கிளை இடைநிறுவன ஊழியர் சங்கம் ரூபா 11 இலட்சத்து 48 ஆயிரம் நிதியுதவியை வழங்கியுள்ளது. சங்க உறுப்பினர்களின் ஒருநாள் சம்பளமாக இந்த நிதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நன்கொடை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பணிக்குழுத் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்திக்கு அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. நிகழ்வில் சங்கச் செயலாளர் D.G.S.D. நவரத்ன பொருளாளர் Y.P.I.C. கருணாதிலக உள்ளிட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். தேசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தனியார் துறை ஊழியர்களும் ஒற்றுமையுடன் பங்களித்து வருவது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.





Leave a Reply