இலங்கை பிரதமர் Harini Amarasuriya 22வது ஆண்டு பொதுநலவாய கல்வி மாநாடு மற்றும் Commonwealth of Learning (COL) 2026 ஆளுநர் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக உத்தியோகபூர்வ விஜயமாக பிரிட்டனுக்கு புறப்பட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது கல்வி, ஆராய்ச்சி, அபிவிருத்தி ஆய்வுகள் மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளை வலுப்படுத்தும் நோக்கில் பல உயர்மட்ட கல்வி மற்றும் இராஜதந்திர சந்திப்புகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
பிரிட்டன் கல்வி செயலாளர் Bridget Phillipson மற்றும் வெளிவிவகார செயலாளர் Yvette Cooper ஆகியோருடன் சந்தித்து இருநாட்டு ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுநலவாய செயலாளர் Shirley Ayorkor Botchwey உடனும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதனுடன் Sussex பல்கலைக்கழகத்தின் Institute of Development Studies நிகழ்விலும், Oxford பல்கலைக்கழகத்தின் Oxford School of Global and Area Studies நிகழ்ச்சியிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார். இந்த விஜயம் இலங்கையின் கல்வி, ஆராய்ச்சி, கொள்கை, பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டு தொடர்புகளை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply