இந்த சந்திப்பில் அரச வருவாய் ஈட்டும் நிறுவனங்களின் சீர்திருத்தம் மற்றும் டிஜிட்டல் நவீனப்படுத்தல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதுடன் அரச துறை ஊழியர்களின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வை பாதுகாக்கும் திட்டங்களுக்கும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. மேலும் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள Revenue Administration Reform and Modernization Bureau மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் எதிர்காலத்தில் உலக வங்கி வழங்கவுள்ள தொழில்நுட்ப,நிர்வாக ஆதரவுகள் பற்றியும் பேசப்பட்டது.
அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் ஒழுக்கத்தன்மையை பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள Internal Affairs Units தொடர்பான திட்டங்களில் உலக வங்கி பிரதிநிதிகள் நேரடியாக இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இந்த சந்திப்பில் உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர்கள் Richard Walker, Anthony Obesekere மற்றும் நிர்வாக நிபுணர் Till Hartman உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




























