இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் மேலும் இருவர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை காரணமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் லொறி பலத்த சேதமடைந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கித்துல்கலையில் லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து மூவர் காயம்
கொழும்பு–கடவத்தையிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி இன்று (03) அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததில் மூவர் காயமடைந்து கித்துல்கல பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹட்டன்–கொழும்பு பிரதான வீதியில் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலுகல சிங்கள மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


































