மலையக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் மக்களை இந்த அபாயத்திலிருந்து விடுவித்து அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும்.
இதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் தொடர்பான சுற்றிவளைப்புகளில் சிறப்பான பங்களிப்பு வழங்கிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
































