சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை
நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்த சூர்ய சரவணன், தனது தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரைப் பயன்படுத்தி வந்தார். வீட்டின் முன்புறம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த கார், காலையில் காணாமல் போனது. இதையடுத்து அவர் நெல்லை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூன்று இளைஞர்கள் காரை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து டவுன் பாரதியார் தெருவைச் சேர்ந்த சரவணன் (22), விளாகம் முத்துராமலிங்கனார் தெருவைச் சேர்ந்த பாலசதீஷ் (20), டவுன் அண்ணா தெருவைச் சேர்ந்த முத்துராஜ் (21) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், காருக்குள் இருந்த மதுபாட்டில்களை எடுக்கச் சென்றபோது, கார் சாவி உள்ளே இருப்பதைப் பார்த்ததால் காரையும் எடுத்துச் சென்றதாக மூவரும் தெரிவித்தனர். காட்டுப் பகுதியில் மதுகுடித்த பின்னர் போதையில் அங்கேயே தூங்கியதாகவும், போதை தெளிந்ததும் நடந்தே வீடு திரும்பியதாகவும் கூறினர்.
இந்த Tirunelveli car theft சம்பவம் தொடர்பாக நெல்லை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.



























