இதன்படி ஆக்ஸ்போர்ட்ஷையரில் உள்ள MoD Bicester, சஃபோக்கிலுள்ள RAF Barnham மற்றும் நார்த் யார்க்ஷையரில் உள்ள RAF Linton-on-Ouse ஆகிய தளங்களில் மொத்தமாக சுமார் 3,750 பேரை தங்க வைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான திட்ட அனுமதிக்காக அரசு விண்ணப்பித்துள்ளது. மேலும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் Wethersfield மற்றும் Crowborough ஆகிய முன்னாள் இராணுவத் தளங்களின் பயன்பாட்டையும் நீட்டிக்க அரசு விரும்புகிறது. இந்தத் திட்டம் தொடர்பாக அகதி உரிமை அமைப்புகள் முன்னாள் இராணுவ முகாம்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ளதால் அங்கு தங்க வைக்கப்படுபவர்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும் என விமர்சித்துள்ளன. UK News
அதேவேளை அரசு இதன் மூலம் விலையுயர்ந்த ஹோட்டல் தங்குமிடங்களை படிப்படியாக நிறுத்தி புகலிட வசதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என தெரிவித்துள்ளது.



























