சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

இணையவழி ஊடாக தொழில் செய்து அதிக வருமானம் ஈட்ட முடியும் எனக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்கள் ஊடாக பொதுமக்களுடன் தொடர்பு ஏற்படுத்தி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் மொத்தமாக 43 இலட்சத்து 86 ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்துள்ளதுடன் அதில் இருந்து 5 இலட்சம் ரூபாயை முறைகேடாக தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்