இவர்கள் வெலிசர இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடி இந்த மோசடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கல்கிசை குற்றப்பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், குறித்த கட்டிடம் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 சீன நாட்டவர்கள் மற்றும் 9 வியட்நாம் நாட்டவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இணையதளம் ஊடாக பல்வேறு நிதி மோசடி வலைப்பின்னல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதுடன் இவர்களின் மோசடி நடவடிக்கைகளின் முழு வலைப்பின்னலை கண்டறிய பொலிஸார் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளனர்.































