காலி பகுதியில் போலி அமெரிக்க டாலர்களுடன் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள்
Sri Lanka Police தெரிவித்ததாவது Dickson Road பகுதியில் தங்கியிருந்த தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரு இளைஞர்கள் போலியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உனாவத்துனை பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் வாடகை நிலைய உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டது. சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிள்களை பெறுவதற்காக சுமார் ரூ.128,000 மதிப்புள்ள போலி அமெரிக்க டாலர் 400 வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து சுற்றுலா போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளையில் சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்தில் மேலும் போலியாக அச்சிடப்பட்ட அமெரிக்க டாலர் 5,200 மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தான் நாட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு போலி நாணயம் பயன்படுத்துதல் குடிவரவு சட்ட மீறல் மற்றும் வெளிநாட்டு நாணயச் சட்ட மீறல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளன.
சந்தேகநபர்கள் நாளை (மே 08) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், Habaraduwa Police மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது









Leave a Reply