சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனங்களின் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகிய உணவு வகைகளின் விலைகள் இன்று சனிக்கிழமை (04) நள்ளிரவு முதல் தலா 15 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேவேளை தேநீர் பால் தேநீர் மற்றும் சில சிற்றுண்டி வகைகளின் விலைகளும் 5 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு விலை குறைவால் உணவகங்களின் செயல்பாட்டு செலவில் ஏற்பட்டுள்ள தளர்வை கருத்தில் கொண்டு இந்த விலைச் சலுகை வழங்கப்படுவதாகவும் இதன் மூலம் பொதுமக்களுக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03) நள்ளிரவு முதல் லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டதை அடுத்தே இந்த புதிய விலைக் குறைப்பு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்