இதையடுத்து விஜய் பல சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவை பெற முயற்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்துள்ளதால் TVK எண்ணிக்கை உயர்ந்தாலும் “மெஜாரிட்டி மார்க்” அடைய இன்னும் கூடுதல் ஆதரவு அவசியமாக உள்ளது. இதனால் ஆட்சியை அமைப்பதில் அரசியல் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கவர்னரும் நிலையான பெரும்பான்மை உறுதி செய்ய வேண்டும் என்று TVK-யிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிகள் இடையே புதிய அரசியல் நகர்வுகள் உருவாகி வரும் நிலையில், தமிழக அரசியல் சூழல் மிகுந்த பரபரப்பாக உள்ளது. விஜய் தலைமையிலான TVK அரசு அமைக்க வேண்டுமெனில் இன்னும் குறைந்தது 6 எம்எல்ஏக்களின் ஆதரவை உறுதி செய்ய வேண்டிய நிலை தொடர்கிறது.































