சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில், மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள், Wi-fi ஆண்டெனாக்களை வழங்குவதாக உறுதியளித்து, பொருட்களை வழங்கத் தவறி, ஒரு தனியார் நிறுவனத்திடம் (ரூ. 36,989,684/=) மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, இந்த சந்தேக நபர்கள் நேற்று (24) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34 மற்றும் 37 வயதுடைய மட்டக்குளி மற்றும் வத்தளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் நேற்று (24) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading