சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

பாராளுமன்றத்தில் கடந்த மே 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஜூன் 3 ஆம் திகதி கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியதன் மூலம் அது 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமாக அமுலுக்கு வந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த புதிய சட்டம் வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குதல் வரி விதிமுறைகளில் தெளிவை ஏற்படுத்துதல் வரி இணக்கம் மற்றும் அமுலாக்கத்தை வலுப்படுத்துதல் வருமானக் கணிப்பீடுகள் மற்றும் கழிவுகளின் துல்லியத்தை மேம்படுத்துதல் பொருளாதார வளர்ச்சி இலக்குகளுக்கு ஆதரவளித்தல் மற்றும் வெளிப்படைத்தன்மை பணச்சலவை தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கங்களாகக் கொண்டுள்ளது.

புதிய திருத்தங்களின் கீழ் சில முக்கிய நிதிசார் பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானக் கணிப்பீட்டு முறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் வணிகங்களுக்கான வரி விலக்குகள் தொடர்பிலும் கூடுதல் தெளிவு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை உரிய அதிகாரிகளுக்கு தகவல்களை வெளியிடுவதற்கான சட்ட வரம்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால் வரி நிர்வாகத்தின் செயல்திறன் மற்றும் கண்காணிப்பு மேலும் பலப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading