சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சிறுமி சாண்டில்யன் வைஷாலியின் கை அகற்றப்பட்டதாகக் கூறப்படும் மருத்துவ தவறு தொடர்பான வழக்கில் விசாரணையை காலதாமதப்படுத்தி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து வருவதாக பொலிஸாரின் செயற்பாடுகளை யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மணிக்கட்டில் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் வீக்கம் ஏற்பட்டதாகவும் பின்னர் அந்த பகுதி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து மருத்துவ அலட்சியம் இடம்பெற்றுள்ளதாக பெற்றோர் குற்றஞ்சாட்டி நீதியை கோரி வந்தனர். வழக்கின் முந்தைய விசாரணையில் முழுமையான அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் தற்போது அது இன்னும் அனுப்பப்படவில்லை என நீதிமன்றத்தில் கூறியதை சுட்டிக்காட்டிய சிறுமி தரப்பு சட்டத்தரணி பொலிஸார் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவதாக வாதிட்டார்.

இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான் நஜ்மி ஹுசைன் பொலிஸாரின் தொடர்ச்சியான காலதாமதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்கின்றது எனக் குறிப்பிட்டு இறுதி விசாரணை அறிக்கையை குறுகிய காலத்திற்குள் அல்லது அடுத்த தவணையில் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டதுடன் வழக்கு குறிப்புகளை வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்புமாறும் பணித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்