சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணம் – பண்ணை கடல் பகுதியில் நேற்று மாலை நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கொக்குவில் – ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

பண்ணை கடலில் நால்வர் நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்கள் சுழியில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், பொலிஸாரின் உதவியுடன் நால்வரையும் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும், அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய இருவரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading