யாழ்ப்பாணத்தின் தையிட்டி விகாரை பகுதிக்கு சென்றிருந்த இரு தமிழ் இளைஞர்கள் பலாலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் விகாரைக்கு அருகாமையில் காணி உரிமையாளர்களின் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விகாரைக்கு செல்வதாகக் கூறி அப்பகுதிக்குள் சென்றதுடன் அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி புகைப்படங்களையும் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனை அவதானித்த பாதுகாப்பு தரப்பினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தையிட்டி விகாரை தொடர்பான பதற்ற நிலைமை மற்றும் அப்பகுதியில் தொடரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.





Leave a Reply