சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பான விவகாரத்தில் பலாலி பொலிஸார் தன்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பலாலி பொலிஸார் தமக்கு எதிராக “பொய் வழக்கு” தாக்கல் செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். கடந்த 2025 டிசம்பர் 4ஆம் திகதி தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது போராட்டத்தை குழப்பும் வகையில் பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் போக்குவரத்து மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறினார். அந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி பொலிஸ் நிலையத்தில் சென்று வாக்குமூலம் வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார். தாங்கள் நீதிமன்ற உத்தரவுகளையும் பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மதித்து ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தி வந்தபோதிலும் போராட்டங்களை நிறுத்தி காணியை வழங்க அழுத்தம் கொடுக்கவே இனவாத நோக்கத்துடன் இத்தகைய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன எனவும் செ.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்