உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை மீண்டும் வழமையான கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் சீராகும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ளது. இதன் விளைவாக Brent மற்றும் WTI எண்ணெய் விலைகள் கணிசமாக வீழ்ச்சி கண்டன.
எனினும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைகள் இன்னும் நுணுக்கமான கட்டத்தில் உள்ளன என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை கப்பல் போக்குவரத்து மற்றும் உலக பொருளாதாரத்தின் மீது இந்த விவகாரம் தொடர்ந்தும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.




























