போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஊதியம் இன்றி சேவையாற்றி வந்த நிலையில் புதிய நியமனங்கள் வழங்கப்படும் போது தற்போது தற்காலிகமாக பணியாற்றும் 120 பேரும் சேவைக்கால அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள் என அமைச்சர்மட்டத்தில் உறுதியளிக்கப்பட்டதாக கூறினர். ஆனால் நாளை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட 92 பேரில் வெறும் 15 பேர் மட்டுமே தற்போதைய தொண்டர்களாக உள்ளதாகவும் மீதமுள்ள 77 பேர் வைத்தியசாலையில் முன் அனுபவமற்றவர்கள் எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும் 2019ஆம் ஆண்டின் சுற்றுநிருப விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த பலர் எவ்வாறு உள்வாங்கப்பட்டனர் என்பது குறித்து விளக்கம் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனால் தமக்கான நியமனங்கள் வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என சுகாதார தொண்டர்கள் எச்சரித்துள்ளனர்.


































