இலங்கை மற்றும் பாகிஸ்தான் இடையிலான விமான போக்குவரத்து மற்றும் துறைமுகத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் துறைமுகங்கள் சிவில் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது அலி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (02) துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் விமான போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்துதல் நேரடி விமான சேவைகள் மற்றும் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
மேலும், துறைமுக மற்றும் கடல்சார் துறைகளில் அறிவு மற்றும் தொழில்நுட்ப அனுபவங்களை பரிமாறிக்கொள்வது செயல்திறனை உயர்த்துவது மற்றும் பிராந்திய போக்குவரத்து தளபாட மையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்தும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இருதரப்பினரும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இச்சந்திப்பில் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.








Leave a Reply