மாவட்ட வாரியான புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்தில் 11,811 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 11,443 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த இரண்டு மாவட்டங்களிலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேலும் மேல் மாகாணத்தில் மட்டும் 23,000க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை உடனடியாக அழித்து சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.



























