இலங்கையில் 7 மாவட்டங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, கம்பஹா, கலுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் ரத்தினபுரி மாவட்டங்களில் அதிகமான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய தகவலின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4,617 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். தற்போதைய நிலைமை காரணமாக கொழும்பு, கம்பஹா மற்றும் கலுத்துறை மாவட்டங்களில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த ஆண்டில் இதுவரை டெங்குவால் 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சமீபத்தில் ரத்தினபுரி மாவட்டத்தில் ஒருவரின் மரணமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் கொசு பெருக்கத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.







Leave a Reply