நாட்டளவில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாகவும், போதைப் பொருள் பயன்படுத்தி வாகனம் ஓட்டுவது பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன் குற்றவாளிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய புதிய தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பரிசோதனை முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




























